சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும்.. மர்ம நபர் மிரட்டல் - போலீஸ் சோதனை
சென்னை: நாடு முழுவதும் ஓடும் 50க்கும் மேற்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும் என மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியா முழுவதும் ஓடும் 50-க்கும் மேற்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சோதனை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு கோவை புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும், 7.20 மணிக்கு சென்டிரலில் இருந்து பெங்களூரு புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் சோதனையிட போலீசார் முடிவு செய்தனர். தொலைபேசி அழைப்பு விடுத்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications