கோவை வரும் பிரதமர் மோடி மீது குண்டு வீசி தாக்கப்படும்: மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீஸ் விசாரணை
கோவை: நாளை கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

மோடியின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானப்படை விமானம் மூலம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வரும் மோடி கார் மூலம் சின்னியம்பாளையத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க செல்கிறார்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் பிரதமர் மீது வெடிகுண்டு வீசப்படும் என்று கூறினார். மேலும் நேற்று முன்தினம் அதே நபர் மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் கோவையில் இருந்து போன் பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சென்னை போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்த 30 வயது நபரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த நபரின் விபரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications