அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். இவர் மனைவி ஜீவா உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வரை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த மதுசூதனன், அதன் பிறகு படுக்கைக்கு சென்றார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் பால்கனி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்கள் வீசியுள்ளனர். சத்தம் கேட்டு மதுசூதனன் வந்து பார்த்தபோது, அங்கு, சில கற்களும் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்று மாலை தண்டையார்பேட்டை போலீசில் ஜீவா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், மதுசூதனின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உறுதியானது. பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக புதிய நிர்வாகிகள் தேர்வில் அதிருப்தி அடைந்த யாராவது இதை செய்திருப்பார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications