உயிரை கையில் புடுச்சிக்கிட்டு இருக்கோம்: வாட்ஸ்ஆப்பில் பரவும் பகீர் ஆடியோ
சென்னை: சவுதியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் ஒருவர் பதட்டமான சூழலில் பேசிய ஆடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் ஒரு இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட புகைப்படமும், மற்றும் ஒரு பெண் பதட்டத்துடன் அது குறித்து பேசும் ஆடியோவும் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.

அந்த ஆடியோவில் பேசிய பெண் கூறியிருப்பதாவது,
நான் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற இடத்தில் ஹவுஸ்மெயிடாக உள்ளேன்(பணிப்பெண்). சவுதியில் இலங்கை தமிழ் பெண்ணான கல்பனா அக்கா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
இங்கு அந்த அக்கா மரணம் மட்டும் அல்ல பல மரணங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்து இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மற்ற தூதரகங்களில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் இலங்கை தூதரகத்தில் மட்டும் கண்டுகொள்வது இல்லை.
சவுதியில் 99 சதவீதம் பணிப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு உயிரும் எப்படி போகிறது தெரியுமா? வெளியில் இருக்கும் டிரைவர் அண்ணாக்களுக்கு கூட தெரியும். ஆனால் யாரும் உதவ முன் வருவது இல்லை.
இந்த ஆடியோவை வாட்ஸ்ஆப்பில் பார்வர்டு செய்யவும். நீங்கள் நினைத்தால் எங்களை கண்டிப்பாக காப்பாற்ற முடியும். நாங்க எல்லாருமே நாட்டுக்கு உயிரோட திரும்பிப் போகணும். எல்லாருமே ஒரே தமிழ் இனம் தானே, தமிழ் ரத்தம் தானே, எங்களுக்காக நீங்க எல்லாம் உதவ மாட்டீங்களா?
இங்கு இருக்கும் நீங்க தான் எங்களுக்கு உதவ முடியும். ஏன் என்றால் இங்கு இருக்கும் இலங்கை தூதரகம் எங்களை கைவிட்டுவிட்டது. கல்பனா அக்காவோட சாவு தான் கடைசியான சாவாக இருக்கணும். நாங்கள் எல்லாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களை எப்பொழுது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது.
நாங்க இருக்கும் வீட்டில் எங்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள். கூடப் பிறந்த அண்ணனா நினைத்து உதவி செய்யுங்க. எங்கள் நாட்டிற்கு செல்ல உதவுங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications