For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயை கோடாலியால் வெட்டிக்கொலை செய்த கொடூர மகன்.. திருவாரூரில் பரபரப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் அருகே தாயை கோடாலியால் வெட்டிக் கொலை செய்த மகனை கைது செய்த போலீசார் திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே விளாங்காட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பத்மாவதி(60), இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன். இதில் மகன் மற்றும் மூன்று மகள்களுக்கு திருமணமாகி விட்டது. திருமணவயதிலிருந்த நான்காவது மகளுக்கு திருமணம் செய்ய பத்மாவதி ஏற்பாடு செய்துவந்தார்.

Brutal murder near in thiruvaru

திருமண செலவுக்காக வீட்டுமனையொன்றையும் தனது மகன் மூலம் விற்றார். இந்நிலையில் அவரது மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டுமனை விற்ற பணத்தை தாயிடம் தராமல் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்மாவதி விபரம் கேட்டார். இதனால் ஆத்திமடைந்த மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டிலிருந்த கோடாலியால் தாய் பத்மாவதியை சரமாரியாக வெட்டினார்.

இதனால் தலை மற்றும் காலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பத்மாவதி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இதுகுறித்து அவரது மகள் சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து சுபாஸ் சந்திரபோசை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 23ந்தேதி சிகிச்சை பெற்றுவந்த பதமாவதி உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சுபாஷ்சந்திரபோசை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் சரணடைந்தார். இதையடுத்து சுபாஷ்சந்திரபோசை அக்டோபர் 7ந்தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி சப் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A 60 year old lady murdered in thiruvarur, her son surrender in court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X