மக்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன்.. இரோம் ஷர்மிளா உறுதி
மக்களுக்காக நெடுங்காலம் போராடிய தன்னை மக்கள் ஏமாற்றிவிட்டார்கள். எனவே, மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொடைக்கானல்; மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் 16 ஆண்டுகள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து போராடிய இரோம் ஷர்மிளா. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் அவர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், அமைதியான அழகான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் வசிக்க முடிவு செய்துள்ளேன். நிரந்தரமாக இங்கேயே தங்க முடிவெடுத்துள்ளேன்.

இன்றைய நிலையில் அரசியல் பற்றி குறிப்பாக எந்த திட்டமும் என்னிடம் இல்லை. நீதிக்கான போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் நடத்த உறுதி பூண்டுள்ளேன். அரசியல் நுழைவில் தமக்கு ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்துள்ளது.
தமக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால் அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் துளியும் இல்லை. மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ஒரு நாள் நிச்சயம் ரத்தாகும் என்று இரோம் ஷர்மிளா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை மணக்க உள்ளதாகவும் இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications