"பயங்கர" எதிர்பார்ப்பில் ஆர்.கே.நகர்... என்ன செய்யப் போகிறார் தினகரன்?
சென்னை: ஆர்.கே.நகர் வாக்காளர்கள் சொன்னபடி தினகரனுக்கு ஓட்டுப் போட்டு முடித்து விட்டனர். இனி தினகரன் சொன்னபடி செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர். என்ன செய்யப் போகிறார் தினகரன் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
மிகப் பெரிய உறுதி மொழிகள் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தினகரனுக்கு மிகப் பெரிய சவால் காத்துள்ளது.
சொன்ன உறுதிமொழிகளை அவர் எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் நடைமுறைச் சிக்கல்கள் அப்படி.

உறுதி அளித்தது என்ன?
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவரவர் பிரச்சினைக்கேற்ப உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது குழந்தைகளின் படிப்புச் செலவு. வேலைவாய்ப்பு, பொருளாதார சிக்கல்கள் என பலவற்றுக்கும் நாங்க சரி செய்றோம் என்று கூறியுள்ளனராம் தினகரன் ஆதரவாளர்கள்.

பெண்கள் ஆதரவு அதிகம்
தினகரன் தரப்பில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும், தெம்பான பேச்சும்தான் பெண்களின் ஆதரவு அமோகமாக கிடைக்க முக்கியக் காரணமாம்

ஆட்சி மீது கடும் கோபம்
அதேசமயம், ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்துடன் உள்ளனராம் ஆர்.கே.நகர் மக்கள். ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அவர் இறந்த பிறகும் சரி சொன்ன எதையுமே ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்பது தொகுதி மக்களின் ஏகோபித்த குரலாக உள்ளது.

சரியில்லாத எதிர்க்கட்சிகள்
அதேபோல ஆட்சியாளர்களை தட்டிக் கேட்பதில் எதிர்க்கட்சிகள் சரிவர செயல்படவில்லை, ஆணித்தரமாக எதையுமே செய்யவில்லை என்பதும் தொகுதி மக்களின் குமுறலாக உள்ளது. இதனால்தான் குக்கரைப் பார்த்து நகர்துள்ளது தொகுதி. இதற்கு முக்கியக் காரணம், தினகரன் சொன்னால் செய்வார் என்ற நம்பிக்கை.

சொன்னதையெல்லாம் செய்வாரா
ஆனால் தினகரன் சொன்னதையெல்லாம் செய்வாரா. தொகுதி மக்களை திருப்திப்படுத்துவரா.. அதற்கு ஆட்சி அதிகாரம் அவருக்கு உறுதுணையாக இருக்குமா என்பதுதான் இப்போது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications