சென்னையில் பயங்கரம்.. மரத்தில் கார் மோதி ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் கருகி பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே இன்று அதிகாலையில் வேகமாக வந்த சொகுசுகார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் மரணமடைந்தனர்.

Car accident race player Ashwin with his wife died in Chennai

உயிரிழந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தையங்களில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்றவர் என்று தெரியவந்துள்ளது.

Car accident race player Ashwin with his wife died in Chennai

இன்று அதிகாலை சுமார் 1.30மணிக்கு பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் ஒட்டி வந்த பிஎம்டபிள்யூ பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி மரத்தில் வேகமாக மோதியது

Car accident race player Ashwin with his wife died in Chennai

இந்த விபத்தால் காரில் தீ வேகமாக பரவியது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் .

Car accident race player Ashwin with his wife died in Chennai

பெரும் சிரமத்திற்கு இடையே உடல்களை மீட்ட போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அடையார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Car race player Aswin sundar met an accidend died with his wife at MRC Nagar in Chennai.
Please Wait while comments are loading...