தோண்டத் தோண்ட நாய்கள் - ராணிப்பேட்டையை அலற வைத்த நாய் வேட்டை!
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் விஷ ஊசி போட்டு நாய்களைக் கொன்று குவித்து புதைத்த கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தோண்டத் தோண்ட நாய்களின் எலும்புக் கூடுகள் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை 21 நாய்களின் உடல்களும், எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெருநாய்கள், விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர்.

ராணிப்பேட்டை பிஎச்இஎல் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இந்த நாய்களை புதைத்துள்ளனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை நாய்களை வெளியில் எடுக்கும் பணி நடந்தது. நான்கு அடி ஆழத்தில் நாய்களைப் போட்டு புதைத்துள்ளனர்.
அதில் சில நாய்களின் உடல்கள் மிகவும் அழுகிப் போயிருந்தன. அந்த இடத்திலேயே நாய்களுக்குப் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்புதான் நாய்கள் மொத்தமாக கொல்லப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் புகார் வந்தது. முன்னதாக இதுகுறித்து கல்லூரி மாணவர் ஒருவர் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவர் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலர் சோமநாதனை உஷார்படுத்தினார். அவர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் விசாரணையை போலீஸார் முடுக்க விட்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications