For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துணை முதல்வர் ஓபிஎஸ் பதவி பிரமாணத்தை ரத்து செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்றும் அதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிளவு பட்டு கிடந்த அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் கடந்த 21ஆம்தேதியன்று இணைந்தன. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. துணை முதல்வராகவும் பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். மாஃபா பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.

Case against the swearing in of Deputy CM OPS

இதற்கு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

துணை முதல்வர் என்ற பதவி சட்டத்தில் இல்லை என்றும், ணை முதல்வராக ஓபிஎஸ்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வராக நியமிக்க முடியுமே தவிர பதவி பிரமாணம் செய்து வைக்கமுடியாது என்றும் இளங்கோ தனது குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

English summary
A petition has been filed in the Madras HC against the swearing in of Deputy CM O Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X