விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 'கேன்டி கிரஷ்' விளையாடிய பெண் அதிகாரி: தீயாக பரவிய வீடியோ
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் கேன்டி கிரஷ் விளையாடியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் கேன்டி கிரஷ் என்னும் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அவர் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கேன்டி கிரஷ் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. ரெட் பிக்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
கேன்டி கிரஷ் விளையாடிய அந்த பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு அருகில் அமர்ந்து இந்த சேட்டையை செய்துள்ளார். அதிகாரிகள் தங்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் பெண் அதிகாரி கேன்டி கிரஷ் விளையாடிய செய்தி அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications