For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி... இதைப் பண்ணுங்க மக்களே.. உலகின் கவனம் ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் கூறும் ஐடியா!

ஏப்ரல் 10ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் காவிரி நதிநீதி பிரச்சினையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரிக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்வோம் -ஜேம்ஸ் வசந்தன்

    சென்னை: காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

    ஏப்ரல் 10ஆம் தேதி சிஎஸ்கேவின் முதல் போட்டி. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் - ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

    Cauvery issue: Suggestion from James Vasanthan

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி.. உத்வேகம்! இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன்.

    இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!

    இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!

    அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, சிஎஸ்கேக்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.

    ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியைக் காண விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி வைத்துள்ள ரசிகர்கள் யோசிப்பார்களா?

    English summary
    CSK's first match is on April 10. An empty Chepauk Stadium, which has a capacity of 50,000, can attract international attention. It will be seen worldwide on TV. This can be achieved without spending a rupee - by a small sacrifice A suggestion from James Vasanthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X