காவிரி ஆலோசனை கூட்டம்.. ஆளும்கட்சியையும் அழைப்பேன்.. கமல்ஹாசன் திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஸ்டாலின் சந்தித்தப் பிறகு கமல் அளித்த பேட்டி

  டெல்லி: காவிரி ஆலோசனை கூட்டத்திற்காக தலைவர்களை சந்தித்து அழைத்து வருகிறேன், நடிகர் ரஜினிகாந்த், ஆளும் கட்சி தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

  காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

  Cauvery: Kamal plans to invite Rajini and TN government to consultative meeting in Chennai

  இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

  அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். மே 19ம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளார்.

  அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தற்போது பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் மற்ற தலைவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். ஸ்டாலினை சந்தித்த அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

  அதில், காவிரி ஆலோசனை கூட்டத்திற்காக தலைவர்களை சந்தித்து அழைத்து வருகிறேன், நடிகர் ரஜினிகாந்த், ஆளும் கட்சி தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

  காவிரிக்காக தலைவர்கள் ஒன்று கூட வேண்டும். ஆளும் கட்சியை சந்தித்து அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளேன். இதற்காக ஏற்பாடுகள் நடத்து வருகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஜினியை போனில் அழைத்து கூட்டத்திற்கு அழைப்பேன்.

  இந்த கூட்டத்தை நான் நடந்தவில்லை. இது விவசாயிகள் தலைமையில் நடக்கும் கூட்டம். எங்கள் கட்சி கூட நடத்தவில்லை. கூட்டத்திற்கு கூட காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Haasan has planned for all party consultative meeting on May 19 to get a solution in Cauvery issue. Kamal invites Stalin for all party consultative meeting in Chennai

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற