தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்.. ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தூத்துக்குடி சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட தமிழக அரசுக்கு மனு அளித்தேன். அதை தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை. எனவே சிபிஐ விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழக்கை விசாரித்தபோது, சூர்யபிரகாசம் வாதிட்டு, "போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை முதல்வரே நியாயப்படுத்தி நேற்று பேட்டியளித்துள்ளார். எனவே, தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளியே வராது. சிபிஐ விசாரணைதான் தேவை" என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஹைகோர்ட், இந்த பிரச்சினை குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications