சட்டவிரோத எக்சேஞ்ச்- கலாநிதி, தயாநிதி மாறன் விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு
சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004-2007-ம் ஆண்டுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் ஒன்றை நடத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார் என்பது சிபிஐ வழக்கு. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் இதனால் ரூ1.78 கோடி அரசுக்கு இழப்பு என்பதும் சிபிஐ குற்றச்சாட்டு.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பரில் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதியன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். தற்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications