வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்த வருமான வரி அதிகாரி!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்து, கோடிக்கணக்கான ரூபாயை தமிழ் சினிமாவில் முதலீடு செய்துள்ளார் வருமான வரி ஆணையர் கிருஷ்ணசாமி.
நேற்று அவரது வீடுகளில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, சென்னை மண்டல வருமாய் வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமியின் சென்னை மற்றும் பழநி அருகேயுள்ள ஆயக்குடி உள்ளிட்ட அவரது வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஆயக்குடி என்ற பெயரில் அவர் நடத்தி வந்த நிறுவனங்களிலும் சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் கிருஷ்ணசாமி தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் வருமானத்திற்கு அதிகமாக 6.1 கோடி ரூபாய் அவர் சொத்து சேர்த்திருப்பதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications