தமிழகத்திற்கு ஆர்.டி.இ நிதியை அள்ளித் தர்றோமே... 'ஏர்போர்ட்' நாராயணசாமி
சென்னை: ஆர்.டி.இ எனப்படும் கல்வி பெறும் உரிமைக்கான நிதி அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக வழங்கப் படுவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் கல்வி பெரும் வகையில் ‘கல்வி பெறும் உரிமைச் சட்டம்' உருவாக்கப் பட்டது. இதன்படி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு தங்களது பள்ளியில் 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கான நிதியை அரசு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்கி விடும்.

ஆனால், அரசிடம் இருந்து நிதி சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி முதலில் இந்தாண்டு இடஒதுக்கீடு தர இயலாது என மறுத்த தனியார் பள்ளிகள், பின்னர் இடஒதுக்கீடுக்கு சம்மதம் தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய ஆர்.டி.இ. நிதியை வழங்குவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி கூறியதாவது:-
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. மாடுகளை துன்புறுத்துவதை தடுக்க புதிய சட்ட விதிகளை ஏற்படுத்தலாம்.
மத்திய அரசு நாடு முழுவதும் கட்டாய கல்வி சட்டத்தை (ஆர்.டி.இ.,) அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். அதற்கான மானியத்தை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த மானியம் தமிழகத்திற்கும் முறையாக வழங்கப்படுகிறது.
ஆனால், சில தனியார் பள்ளிகள் மானியம் சரியாக கிடைப்பதில்லை என புகார் கூறுகின்றன. மாநில அரசுகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து பரிமாற்றத்தால் தான் அவர்களுக்கு மானியம் சரியாக போய்ச் சேருவதில்லை. மத்திய அரசு தரும் நிதியை மாநில அரசுகள் முறையாக வழங்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications