அனிதாவின் குடும்பத்தினரை விரைவில் சந்திப்பேன்- பொன்.ராதாகிருஷ்ணன்
அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், அனிதாவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அனிதாவின் இழப்பானது அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பு ஆகும். மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications