வெள்ள பாதிப்பு: தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய மத்திய குழு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ள மத்திய குழு தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டுவிட்டு சென்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிட வந்துள்ளது மத்திய குழு.

வெள்ள பாதிப்பு பற்றி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து வெள்ள பாதிப்புகள், சீரமைப்பு பணிகளை பார்வையிட டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் மத்திய குழு திங்கட்கிழமை இரவு சென்னை வந்தது.
அந்த குழுவினர் இன்று பிற்பகல் முதல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளனர். வெள்ளத்தால் மைலாப்பூர் சிவகாமி சாலையில் ஏற்பட்ட விரிசலை முதலில் பார்வையிடும் அவர்கள் பிறகு கோட்டூர்புரம் செல்கிறார்கள். பின்னர் சைதாப்பேட்டை ஆத்துமா நகருக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
சைதாப்பேட்டையை அடுத்து ஜாபர்கான்பேட்டை, விரும்பாக்கம், வேம்புலிஅம்மன் கோவில் தெரு, வளசரவாக்கம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இன்றும், நாளையும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அந்த குழு டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிக்கும்.
அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நிவாரணம், சீரமைப்புக்காக மாநில அரசுக்கு நிதி அளிக்கும். வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள குழுவினர் இன்று காலை தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications