வெள்ள பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் விசூர் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய குழு ஆய்வு!!
சென்னை: தமிழக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு இன்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் விசூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தியது.
தமிழகத்தைப் புரட்டி போட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் மத்திய அரசின் குழு சென்னை வந்தது. சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

பின்னர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது. ஆனாலும் வெள்ள பாதிப்புகளை முழுமையாக பார்வையிடாமல் மேலோட்டமாக மத்திய குழு ஆய்வு செய்தது என்பது பொதுமக்களின் புகார்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளையும் மத்திய குழு ஆய்வு செய்தது. இன்று காலை பண்ருட்டி சென்ற இக்குழு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் வெள்ள சேத விவரங்களை மத்திய குழு கேட்டறிந்தது.

இக்கூட்டம் முடிந்த பின்னர் வெள்ளத்தால் முழுவதுமாக அழிந்த விசூர் கிராமத்துக்கு சென்று மத்திய குழு பார்வையிட்டது. விசூரைத் தொடர்ந்து பெரியகாட்டுப்பாளையத்தில் முகாம்களில் தங்கியிருந்த மக்களிடம் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு கேட்டறிந்தது.
இதன் பின், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தை மத்திய குழு பார்வையிடுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications