எஃப்.எம். வானொலி ஏலம் விவகாரம்.. சன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
சென்னை : எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் குழு டெல்லியில் கடந்த ஜூலை 14 -ஆம் தேதி கூடியது. அப்போது, மத்திய உள்துறையிடம் இருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெறத் தவறிய சன் குழுமத்தின் விண்ணப்பங்களை அந்தக் குழு நிராகரித்தது.

பின்னர், சன் குழும நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், எஃப்.எம். வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு அனுமதி அளித்தார்.
இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எஃப்.எம். வானொலி ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சன் குழுமம் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், இந்த நிபந்தனையைக் கருத்தில் கொள்ளாமல் சன் குழுமத்துக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனவே, கடந்த ஜூலை 23-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications