தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் உட்பகுதியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்க உள்ளது. ஆனால், கத்தரிக்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இப்போதே பகல் பொழுதுகளில் வெளியில் செல்ல இயலாமல், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். எனவே, கத்தரி ஆரம்பித்தால் இன்னும் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் உட்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களை சற்று குளிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவுக்கு ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீசும். அதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்பதால் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும்.
காலநிலையும் இயல்பை ஓட்டியே இருக்கும். கோடை மழையை பொறுத்தவரையில் தமிழகத்தின் உட்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரையில் 94 முதல் 96 டிகிரி வரை வெப்பம் இருக்கும். காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்களும் கவனமாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்" என்றனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications