உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் நிச்சயம் படுதோல்விதான்... சந்திரகுமார்
சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் படுதோல்வியைத்தான் தழுவும் என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க. இணையும் விழா வரும் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் ம.தே.மு.தி.க. தலைவர் சந்திரகுமார் கூறியதாவது:
சேலத்தில் தி.மு.க.வில் மக்கள் தே.மு.தி.க. இணையும் விழா மாநாடு போல நடைபெறும். மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 3 லட்சம் பேர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள்.
தே.மு.தி.க.வை விட்டு வெளியேறியவர்கள் யாரும் மீண்டும் தே.மு.தி.க.வுக்கு செல்லவில்லை. மக்கள் தே.மு.தி.க.வை பார்த்து பயப்படும் நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுவிட்டது.
விஜயகாந்த் சுயமாக முடிவு எடுப்பதில்லை. கட்சியை நடுகாட்டில் விட்டு விட்டார். நான் கடைசி வரை தி.மு.க. தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தே.மு.தி.க. அறக்கட்டளையில் விஜயகாந்த் குடும்பத்தினரே உறுப்பினர்களாக உள்ளனர்.
அறக்கட்டளை கட்சிக்கு சொந்தமானதா என்பது குறித்து விளக்கம் தேவை. உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை விட படுதோல்வி அடையும்.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications