நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள்.. தொட்டாலே உதிருது.. கிண்டல் செய்யும் பயனாளிகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள 80 தொகுப்பு வீடுகள், பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட பின்னரும் கட்டிடங்களை கைகளில் தொட்டாலே உதிரி உதிரியாக சிமெண்ட் உதிர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது..
செங்கல்பட்டில் இருந்தது சுமார் 69 மீது தூரத்தில் அமைந்துள்ளது கொடூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் என்ற பகுதியில் 80 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இருளர் மற்றும் திருநங்கைளுக்காக இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகளின் நிதியின் கீழ் 30 வீடுகள் இருள்களுக்காக கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் திருநங்கைகளுக்கு 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பபீட்டில் 80 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன.. இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகளை அண்மையில் மாவட்ட ஆட்சியர் மற்றறும் ஆய்வு செய்தார்கள்.
இந்த வீடுகளை எப்போது திறந்து வைக்கலாம் என்று அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில், வீடுகள் தரமற்றதாகவும், கை வைத்தாலே உதிர்வதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினார்கள். இதனால் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் வீடுகள் முழுமையாக சரிபார்த்த பின்னரே பயளாளிகளுக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் மக்களிடம் உறுதி அளித்துள்ளனர். இதன்பின்னர் உடனடியாக அனைத்து வீடுகளுமே பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது.

ஆனால் பேட்ச் ஒர்க் பணிகள் முடிந்த பின்னருமே வீடுகளின் சுவர்கள் அக்கு அக்காக உதிர்ந்து விழுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் பயனாளி ஒருவர் சற்று தேய்க்கும் போதே மாவு போல் சிமெண்ட் சுவர்கள் உதிர்ந்து விழுகிறது.. தரமற்ற வகையில் கட்டுமான பொருட்களை பயன்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளளதாகவும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து தரமான முறையில் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடுகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த வண்ணாரப்பேட்டை படத்தில் அரசு கட்டிக்கொடுத்த அடுக்குமாடி வீடுகள் தரமற்ற வரையில் இருக்கும். அதுபோன்ற சம்பவங்கள் நிஜத்தில் அவ்வப்போது நடந்து வருவதாக புகார்கள் தொடர்கின்றன. தரமற்றற வீடு மற்றும் சாலை கட்டுமானங்களை தடுக்க ஒப்பந்ததாரர்களிடம் இத்தனை வருசத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று ஒப்பந்தகளை மாற்றிய பின்னரே டெண்டர்களை விட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications