17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி காதல் கல்யாணம்.. கம்பி எண்ணும் விமல்ராஜ்!
செங்கல்பட்டு : செங்கல்பட்டில் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அம்மனம்பாக்கம் செங்கேனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனபால் என்பவரது 17 வயது மகள் பார்வதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பார்வதி செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். .இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை காணாமல் போன பார்வதியை உறவினர்கள் வீடு, அவரது தோழிகள் வீடு என எங்கெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. மகள் கிடைக்காததால் கவலை அடைந்த பெற்றோர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வல்லம் நாவிதர் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் விமல்ராஜ் (25) என்பவர் பார்வதியை காதலித்து வந்ததும் கடந்த 3 ஆம்தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்கள் மதுராந்தகம் தேவாத்தூர் பகுதியில் விமல்ராஜின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. விரைந்து சென்ற தாலுகா போலீசார் விமல்ராஜை பிடித்து பார்வதியை மீட்டு தாம்பரம் பெண்கள் விடுதியில் ஒப்படைத்தனர்.
சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று காதல் திருமணம் செய்து கொண்ட விமல்ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications