மீண்டும் போராட்டமா? இயக்குநர் கவுதமனுக்கு சென்னை போலீஸ் சம்மன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட இயக்குநர் கவுதமனுக்கு சென்னை மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாராவில் கடந்த ஏப்ரல் மாதம் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரே திக்குமுக்காடி போனது.

Chennai city police summons to film director Gauthaman

இந்நிலையில் கிண்டி கத்திபாராவில் நடந்தது போல மீண்டும் ஒரு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் கவுதமன் இளைஞர்களை துண்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Gowthaman Slammed Ramanathapuram Collector - Oneindia Tamil

இதனையடுத்து இயக்குநர் கவுதனுக்கு சென்னை மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னை மவுண்ட் துணை ஆணையர் முன்பு ஆஜராகி விளக்கம் தருமாறு இயக்குநர் கவுதமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai city police summons to film director Gauthaman. Gauthaman plans to conduct one more protest like guindi Katipara it seems.
Please Wait while comments are loading...