சென்னையில் மேகமூட்டம்.. சில் காற்று.. செம க்ளைமேட்!
சென்னையில் காலை முதலே மேகமூட்டத்துடன் குளிர்காற்றும் வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: காலை முதலே மேகமூட்டத்துடன் குளிர்காற்றும் வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஒரு வாரம் தாமதாமாக தொடங்கினாலும் இயல்பை விட அதிக மழை பெய்யும் என கூறப்பட்டது.
தொடக்கத்தில் வெளுத்து வாங்கிய மழை கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்து வருகிறது. ஓகி புயல் புண்ணியத்தில் தென் தமிழகம் நல்ல மழையை பெற்றது.

வட தமிழகத்தில் இல்லை
ஆனால் வடதமிழகத்தில் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையும் ஒடிசாவை நோக்கி நகர்ந்ததால் வடதமிழகத்திற்கான மழை வாய்ப்பு புஸ்ஸாகிப் போனது.

சென்னையில் மேகமூட்டம்
இந்நிலையில் சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சிறுதூறலும் ஏற்படுகிறது.

ஊட்டியை போன்று
ஏசிக்கு போட்டியாக சில்லென காற்றும் வீசி வருகிறது. குளிர் காற்று மேகமூட்டம் போன்றவற்றால் சென்னை ஊட்டியை போன்றுள்ளது.

கடல் கொந்தளிப்பு
இதனிடையே சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications