மழைக்கால நோய்களை எப்படி தடுக்கலாம்?- குறுஞ்செய்தி அனுப்ப மாநகராட்சி முடிவு!
சென்னை: சென்னையில் உள்ள மக்கள் மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து குறுஞ்செய்தி மூலம் மாநகராட்சி சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகிறது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையினால் ஏரிகள் நிரம்பி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கின்றன.
இந்தநிலையில், சென்னையில் வெள்ளநீர் வடிந்துவிட்டதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் செய்தி:
எனவே மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து தப்புவது எப்படி என்பதை சென்னை மாநகர மக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை அனுப்பி வருகின்றனர்.

மழைக்கால தொற்று நோய்கள்:
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர், "சென்னை மாநகர மக்கள் மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து தப்புவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, எளிய தமிழில் அவர்களுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டது.

70 லட்சம் பேருக்கு:
அதன்படி சென்னையில் 70 லட்சம் பேருக்கு செல்போன் மூலம் கடந்த 11 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. வருகிற 25 ஆம் தேதி வரை இந்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

கொதிக்க வைத்து குடியுங்கள்:
குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கவும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகில் இருக்கும் மாநகராட்சி மருத்துவமனையை அணுக வேண்டும்.

கைகளைக் கழுவுங்கள்:
உணவு உட்கொள்ளும் முன் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும். வீட்டில் உள்ள மேல், கீழ்நிலை தொட்டிகளை பழைய நீரினை அகற்றி பிளீச்சிங் பவுடர் மூலம் தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

கழிவறை அவசியம்:
திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தவிர்த்து, பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும். காலணிகளை அணிந்து சென்றால் நோய் வராமல் தடுக்கலாம்" என்று அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications