நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை... ட்விட்டரில் எச்சரிக்கும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை-கமல் எச்சரிக்கை- வீடியோ

சென்னை: சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.

இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்று கமல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்க்கிறது. சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் இப்போதே தண்ணீர் தேசங்களாகி வருகின்றன. 2015 பெரு வெள்ளத்தில் இருந்து யாரும் இன்னமும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.

நகரின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்கள் நீச்சல் குளங்களாகி விட்டன. இதனால் விடுமுறை அறிவித்து விட்டது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில் கமல்

கமல் எச்சரிக்கை

சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. சேலையூா் ஏாி, கூடுவாஞ்சோி, நந்திவரம், முடிச்சூா் ஏாிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது.

நில அபகரிப்பு

நில அபகரிப்பு

நீா்நிலை ஆா்வலா்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏாிகளின் கொள்ளளவு தொியாது. நீா் வரத்து பாதைகளும், நீா் வெளியேறும் பாதைகளும் தொியாது. தொியாது, தொியாது என்பதை விட நில அபகாிப்புக்கு வசதியாய் தொியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.

சட்டம் மீறப்படுகிறது

சட்டம் மீறப்படுகிறது

நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏாிக்கு நீா் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று வரை சட்டம் மீறப்பட்டே வருகிறது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரலெழுப்பவும் ஊடகங்கள் உதவவேண்டும். வரும் முன் காப்போம், நித்திரை கலைப்போம் என்று ட்விட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளாா் கமல்.

எச்சரிக்கும் கமல்

எச்சரிக்கும் கமல்

ஏற்கனவே வடசென்னை ஆக்கிரமிப்பு பற்றியும் வெள்ள சேதம் பற்றியும் எச்சரித்து கள ஆய்வு செய்தார் கமல். மீண்டும் தென்சென்னை, வடசென்னை வெள்ள சேதம் பற்றி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan warns of flood threat in Chennai.
Please Wait while comments are loading...