For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நாளை டிச.6 வங்கிகள் இயங்கும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை ஞாயிறு டிசம்பர் 6ம் தேதி அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக சென்னை தனி தீவானது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிய நிலையில், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வங்கிகளில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் கூட அவர்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

atm

பல வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு, தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டது.

இதனிடையே மத்திய அரசின் நிதிச் சேவை துறையினர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வங்கி சேவைகள் குறித்து அரசு, தனியார் வங்கிகளின் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் நேரம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

English summary
All public and private sector banks in the flood-ravaged Chennai and other districts of Tamil Nadu will remain open on Sunday and also offer extended business hours, according to a Finance Ministry statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X