சென்னையில் வரும் 6, 7ஆம் தேதிகளில் மழை வெளுக்குமாம்.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ

  சென்னை: வரும் 6, 7ஆம் தேதிகளில் மழை அதிகமாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

  தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நல்ல மழையை சந்தித்து வருகிறது. சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடுவெதமேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

  அச்சப்பட வேண்டாம்

  அச்சப்பட வேண்டாம்

  சென்னையில் இடைவெளி விட்டு அங்கும் இங்கும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதனால் அச்சப்படும் அளவுக்கு ஏதும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அச்சுறுத்தும் அளவுக்கு மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  6,7ஆம் தேதிகளில் வெளுக்கும்

  6,7ஆம் தேதிகளில் வெளுக்கும்

  வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்னும் மழை ஓயவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னை அதிக மழை பொழிவை சந்திக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

  தென் தமிழகம், உள்மாவட்டங்களில்..

  தென் தமிழகம், உள்மாவட்டங்களில்..

  தென் தமிழகம் மற்றும் மேற்கு உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டம் சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் இன்று மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  இன்று மழை பெய்யும்

  இன்று மழை பெய்யும்

  கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதேபோல் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலையிலும் இன்று மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

  எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு

  எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு

  வரும் நாட்களில் நீலகிரி, குன்னூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் கணித்தது பெரும்பாலும் பலித்து உள்ள நிலையில் அவரது இந்த தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Today there will be many spells of rains with breaks. But nothing to fear as it will happen with breaks and here and there. But nothing as now looks threatening said tamilnadu weatherman. The rains from this low is not yet over in Chennai, we are going to see more rains and 6/7th November looks very good for one intense spell.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற