ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமனம் செய்ய கோரி ஹைகோர்ட்டில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி. நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். அதிமுக பிரமுகர்களான இவர்கள் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாளரை கழக சட்ட விதிகளின்படி தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு விசாரணையில் உள்ளது.

Chennai HC should appoint to maintain Jayalalitha's assets, ADMK activists files plea

ஆர்.கே. நகர் தேர்தலின் போது ஜெயலலிதா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.913.42 கோடி மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதிமுக என்ற தொண்டர்களின் இயக்கம் தொண்டர்களுக்குத்தான் சொந்தம்.

எனவே, அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் அதிகாரப்பூர்வ நிர்வாகி ஒருவரை ஹைகோர்ட் நியமிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK activists filed a plea in Chennai HC should appoint to maintain Jayalalitha's assets.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற