மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!
ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஆதினத்துக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன் ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு தடை விதித்து அதிரடிப்படி வழங்கினார்.

நித்தியானந்தாவுக்கு தடை
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்தியானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை தொடரும்
உரிமையியல் வழக்கு முடியும் வரை தடை தொடரும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது.

அரசு அறிக்கை தரவேண்டும்
மதுரை ஆதீனம் உட்பட எந்த மடாதிபதியும் முறைகேடு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட மடாதிபதிகள் மீதான நடவடிக்கை பற்றி அரசு அறிக்கை தரவேண்டும்.

சொத்துக்கள் பறிமுதல்
மேலும் மடங்களுக்கு வாரிசுகள் நியமிப்பது தொடர்பான வழிமுறைகளை 8 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் ஆதீனத்தின் சொத்தை அரசு பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications