For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்தை தலைமை நீதிபதி தவிர மற்றவர்கள் புறக்கணித்தனர்- வீடியோ

    சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த சுதந்திர தின, தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் பங்கேற்காமல் தவிர்த்து விட்டனர்.

    நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களின் போது ஆளுநர் மாளிகையில் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

    Chennai High court judges skip Governors tea party

    நேற்று நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதன்பிறகு ஆளுநர், தேனீர் விருந்து அளித்தார்.

    இதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழில் தஹில் ரமானி பங்கேற்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை. அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    சமீபத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்றபோது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நீதிபதி ரமேஷ் அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The judges of Madras High Court has boycotted the tea party organised by Raj Bhavan on the Independence Day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X