சென்னையில் இன்று இரவும் பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை: வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அவ்வப்போது மழை பொழிகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவிவந்த நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், சோழவரம், பூண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், காலை வேளையில் இதமான சூழல் நிலவியது.

சென்னை விமான நிலையத்தில் 35.6 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீ மழையும் பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 22 மி.மீ மழையும், பூண்டியில் 3.40 மி.மீ பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 1 மணி நேரமாக கனமழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்றிரவும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications