For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபாநாயகர் தனபால்-சு.முத்துசாமி சந்திப்பு | வானிலை எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை குறைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    தென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குளச்சல் - கீழக்கரை

    குளச்சல் - கீழக்கரை

    தென்மேற்கு வங்கக்கடலில் கடல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் அந்தமான் கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளச்சல்-கீழக்கரை வரையில் உள்ள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

    கடல் அலைகள்

    கடல் அலைகள்

    தென்மேற்கு திசையில் 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் காரணமாக கடல் அலைகள் 3.5கி.மீ முதல் 3.7கி.மீ வரை எழும்பும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    3 நாட்களுக்கு நீடிக்கும்

    3 நாட்களுக்கு நீடிக்கும்

    கோவை, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்த நிலையில், தற்போது அங்கும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரித்து இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai Meteorological center warns Tamilnadu Fisherman to do not enter into sea. Sothern Tamilnadu sea will be rough said chennai meteorological center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X