சென்னை, வடகடலோர மாவட்டங்களில் செவ்வாய் வரை செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழையால் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் சென்னையிலும் நேற்று வரை கனமழை கொட்டியது.

செவ்வாய்க்கிழமை வரை
இந்நிலையில் இன்று காலை முதலே விட்டு விட்டு வெயில், மேகமூட்டம் என இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வெயிலை நம்பி ஏமாறாதீர்
காற்றின் திசை சென்னை மற்றும் வட தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பகல் நேரத்திலேயே திடீரென மழை பெய்யும் என்று கூறிய அவர், சுள்ளென காயும் வெயிலை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை வரை விட்டுவிட்டு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் எந்த நேரத்திலும் க்ளைமேட் மாறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்கள் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளம் ஏற்படாது
நாளையும் செவ்வாய்க்கிழமையும் நல்ல மழை பொழிவு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போது வரை மழை பெய்வது 100 சதவீதம் உறுதி என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மழையால் வெள்ளம் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

நவ.8க்கு பிறகு இருக்காது
டெல்டா மாவட்டங்களிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி முதல் சென்னையில் மழை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications