தங்கையைக் கிண்டல் செய்தவரைக் கொல்ல திட்டம்... கூலிப்படையினருடன் அண்ணன் கைது!
சென்னை: தங்கையை கிண்டல் செய்தவரை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் மற்றும் கூலிப்படையினர் 6 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் உதவி கமிஷனர் லட்சுமி நாராயணன் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லப்பா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தீனதயாளன், முத்து மற்றும் போலீசார் ராம்நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், சாலையில் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், போலீசார் அவர்களது வாகனங்களைச் சோதனையிட்டனர். அதில், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜேஷ்(25), நாகராஜ்(29), பனையூரைச் சேர்ந்த மோத்திபாபு(30), கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலா(29), பெசன்ட் நகரை சேர்ந்த காசிம்(25), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்ரம்(29) என்பது தெரியவந்தது.
மேலும், பனையூரை சேர்ந்த அசாரூதீன்(23) என்பவரின் தங்கையை அதே பகுதியைச் சேர்ந்த பரகத்அலி என்பவர் கிண்டல் செய்ததாகவும், எனவே அவரைக் கொலை செய்ய அசாரூதீன் ரூ.75 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அசாரூதீன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம், 6 செல்போன்கள், 6 கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications