இதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
    கருப்பு பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ

    சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்ததை எதிர்க்கும் விதத்தில் பறக்கவிடப்பட்ட கறுப்பு நிற பலூன்களை சென்னை போலீஸ் தேடி தேடி உடைத்து வருகிறது.

    சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும். சென்னை விமான நிலையம் மூலம் மோடி மாமல்லபுரத்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வந்துள்ளார்.

    Chennai police burst baloons amidst Modis visit to Chennai

    பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை காரணமாக கறுப்பு நிற பலூன்களை பறக்க விட்டு போராடி வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    இதனால் தற்போது சென்னை போலீஸ் கறுப்பு நிற பலூன்களை தேடி தேடி உடைத்து வருகிறது. இதற்காக சென்னை போலீசில் தற்காலிகமாக சிலர் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உதவியுடன் சென்னையில் கறுப்பு பலூன்களை கொண்டு செல்பவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு பலூன்கள் உடைக்கப்படுகிறது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்திலும் இதேபோல் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் மோடிக்கு எதிராகவும் இன்று பலூன்கள் பறக்க விடப்பட்டது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

    English summary
    Chennai police burst baloons amidst Modi's visit to Chennai. People opposing Modi visit by sending black baloons.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற