வலையில் சிக்காமல் தப்பிய சிடி மணி.. பயங்கர தாதா.. யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: ரவுடி பினு பிறந்த நாள் பார்ட்டியை முன்வைத்து 76 ரவுடிகளை கொத்தாக அள்ளியது சென்னை போலீஸ். இதில் பிரபல ரவுடி தேனாம்பேட்டை சி.டி. மணி நூலிழையில் தப்பியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

  சென்னையின் ஏ கிரேடு ரவுடிகளில் தேனாம்பேட்டை சிடி மணியும் ஒருவர். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சிடி மணிக்கு தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.

  பிரபல ரவுடி சிடி மணி

  பிரபல ரவுடி சிடி மணி

  சென்னை சைதாப்பேட்டையில் சில ஆண்டுகளுக்கு முன் திமுக பிரமுகர் ஜெகந்நாதனை துப்பாக்கியால் சுட்டு தாக்கியதில் சிடி மணியை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. இதேபோல் சிடி மணி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  சிடி மணிக்கும் அழைப்பு

  சிடி மணிக்கும் அழைப்பு

  இந்நிலையில் பி கிரேடு ரவுடிகளின் தலைவனான பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சிடி மணியும் அழைக்கப்பட்டிருக்கிறார். சிடி மணியும் தனது கூட்டாளிகளுடன் பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

  பாதி வழியில் சிடி மணி எஸ்கேப்

  பாதி வழியில் சிடி மணி எஸ்கேப்

  அப்போது போலீசில் உள்ள கறுப்பு ஆடு ஒன்றே போலீஸ் ஆபரேஷன் பற்றி சிடி மணிக்கு தகவல் கொடுத்ததாம். இதனால் பாதி வழியிலேயே சிடி மணி திரும்பி எஸ்கேப்பாகிவிட்டாராம்.

  உளவாளி போலீஸுக்கு குறி

  உளவாளி போலீஸுக்கு குறி

  அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் சென்னையில் அசைக்க முடியாத டாப் 1 ரவுடியாக வலம் வரும் சிடி மணிக்கு கறுப்பு ஆடுகளே உதவியிருப்பது ஆபரேஷனுக்கு போன போலீசாருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இப்போது சி.டி.மணியின் உளவாளி போலீஸ் தீவிரமான கண்காணிப்பில் இருக்கிறார் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police sources said that South Chennai Rowdy CD Mani escaped during the 'Binu Operation'.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற