For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் 3 பேர் அணையில் மூழ்கி பலி

புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் 3 பேர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புனேவில் இறந்து போன சென்னை மாணவர்களின் உடல்கள் இன்னும் கொண்டுவரப்படவில்லை

    சென்னை புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் 3 பேர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த 20 மாணவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்றது.

    Chennai School students dead in Pune after drain in dam

    கடந்த 23ஆம் தேதி ரெயில் மூலம் மாணவர்கள் புனே புறப்பட்டு சென்றனர். புனேவிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேப்டர் கிராமத்தில் 'முல்சி' அணை உள்ளது. இந்த அணையில் மாணவர்கள் இறங்கி குளித்தனர்.

    அப்போது எதிர்பாரதவிதமாக 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கினர். சந்தோஷ் (13), சரவணக்குமார் (13), தானிஷ் (13) ஆகிய மூன்று மாணவர்களும் அணையில் மூழ்கினர். அவர்களை ஆசிரியர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    Chennai School students dead in Pune after drain in dam

    ஆனால் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் காப்பாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மாணவர்கள் அணையில் மூழ்கியது குறித்து புனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அணையில் மீட்பு படையினருடன் தேடினர். அதில் சந்தோஷ் உடல் மட் டும் கிடைத்தது. மாயமான மற்ற இரண்டு மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனையறிந்த 3 மாணவர்களின் பெற்றோர்களும் இன்று புனேவுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். அணையில் மூழ்கிய 3 மாணவர்களும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Chennai School students dead in Pune after drain in dam. One student body rescued and police searching for other two students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X