கவின்கலைக்கல்லூரி மாணவர் தற்கொலை - உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரகாஷ் உடலை வைத்து வேலூரில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வேலூரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின்கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ்,வயது 24. சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் படித்து வந்தார்.

பிரகாஷ் அடுக்கம்பாறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். புதன்கிழமையன்று அடுக்கம்பாறை அருகே உள்ள குழவிமேடு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பிரகாஷின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், விரைந்து வந்து மாணவன் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர் தனது மரணத்திற்கு முன்பாக செல்போனில் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மரணத்திற்குக் காரணம் துறைத்தலைவர் கொடுத்த டார்ச்சரே காரணம் என்று கூறினார். மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வரின் சமாதானத்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே மாணவரின் உடலை வைத்துக்கொண்டு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications