மழை வெள்ள நிதிக்காக “சென்னையில் திருவையாறு”- 18ம் தேதி தொடக்கம்!
சென்னை: சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவையாறு நிகழ்ச்சி வருகிற 18 ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் "சென்னையில் திருவையாறு" என்ற கர்நாடக இசை மற்றும் நடன நிகழ்ச்சியை லக்ஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான 11வது இசை விழா சென்னை காமராஜர் அரங்கில் வருகிற 18 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடக்கிறது. இதை நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.
பி.எஸ்.நாராயணன் தலைமையில் பஞ்சரத கீர்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 7 நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மழை வெள்ளத்தால் தயக்கம்:
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராம், லக்ஷ்மண் கூறியதாவது, "மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நிகழ்ச்சி நடத்த தயங்கினோம்.

நிதி திரட்டிக் கொடுப்போம்:
பல இசை கலைஞர்கள் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிற நிகழ்ச்சியாக இதை நடத்துவோம். இதன் மூலம் நிதி திரட்டி கொடுப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

நிதி சேகரிப்பு:
இதன் மூலம் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை வசூலித்து வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருக்கிறோம். நிகழ்ச்சி நடக்கும் காலத்தில் காமராஜர் அரங்கில் கலைஞர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் நிவாரண நிதி சேகரிக்க இருக்கிறோம். இந்த ஆண்டு பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

கர்னாடிக் சிம்பொனி:
முதல் நாளில் பாடகர்கள் அனில் சீனிவாசன், நரேஷ் அய்யர், சைந்தவி, பிரவின் ஆகியோரின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இசை கலைஞர்கள் இணைந்து ‘‘கர்நாட்டிக் சிம்பொனி'' இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

மெழுகு சிலை:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முழு உருவ மெழுகு சிலைய காமராஜர் அரங்கில் வைக்கிறோம். வயலின் இசை மேதை அ.கன்யாகுமரிக்கு பி.சுசீலா ஆழ்வார் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்குகிறார். நிகழ்ச்சியின் அனைத்து நாட்களிலும் உணவு திருவிழா நடக்கிறது.

இலவச பஸ் வசதி:
40க்கும் மேற்பட்ட உணவகங்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கிறது. ரசிகர்களுக்கு பல்வேறு பரிசு திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இரவு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப இலவச பஸ் வசதி செய்திருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications