ப.சி வீட்டில் சிபிஐ ரெய்டு எதிரொலி: திருச்சி அருகே மோடியின் கொடும்பாவி எரிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ இன்று ரெய்டு நடத்தியது. இதனைக் கண்டித்து திருச்சியில் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் மோடியின் கொடும்பாவியை எரித்தனர்.

வெளிநாடுகளில் முதலீடு, வரிஏய்ப்பு உள்ளிட்ட புகாரை அடுத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அவரது மகனின் வீடு என நாடு முழுவதும் அவருக்கு சொந்தமான 14 இடங்களில் இந்த அதிரடி ரெய்டு நடைபெற்றது.

Chidambaram's supporters burned Modi's effigy in Trichy

ப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் பிரதமர் மோடியின் கொடும்பாவியையும் எரித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The CBI conducted a raid on former Union Minister P Chidambaram's residence today. Chidambaram's supporters burned Modi's effigy in Trichy.
Please Wait while comments are loading...