இளங்கோவன் அறிக்கை மிகுந்த வருத்தம் தருகிறது: ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை மிகவும் வருத்தத்தை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஜெயந்தியைப் போலவே, கட்சியில் இருந்து இன்னொருவர் தன்னுடைய மகனுடன் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும்' என இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், இளங்கோவனுக்கும் மோதல் உள்ள நிலையில், இளங்கோவன் மறைமுகமாகக் கூறியிருப்பது அவரைத் தான் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக சிதம்பரம் டெல்லி சென்று ராகுலைச் சந்தித்து முறையிட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இளங்கோவனைப் போனில் அழைத்து கண்டித்தார். இதற்கிடையே, இளங்கோவனைக் கண்டித்து கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் போஸ்டர்களும் ஒட்டினர்.
இந்த சூழ்நிலையில், நேற்று கார்த்தி ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியதாக செய்தி வெளியானது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களான மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல்பெருமாள், கே.எஸ்.அழகிரி உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டு, கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. இவற்றை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கருத்தில் கொண்டு இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அறிவுரை வழங்கியிருப்பதாக செய்தித்தாள்களில் படித்தோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எங்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், எங்களுடைய உழைப்பையும், பங்களிப்பையும் தருவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் கலந்து, அரவணைத்து கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications