மேட்டூர் அணையில் நீர் திறக்கிறார் எடப்பாடியார்.. முதல்வர் பங்கேற்பது இதுவே முதல்முறை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே கனமழை கொட்டித்தீர்ப்பதால் அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. நேற்று வரை 90 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 95 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை திறப்பு
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நாளை மறுநாள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதற்காக சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்களை இருப்பு வைக்கவும் அவர் நேற்று உத்தரவிட்டார்.

அணையை திறக்கிறார் முதல்வர்
இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் மேட்டூரில் நடைபெறும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவே முதல்முறை
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications