For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகள் இணைப்பு .. அரசே எல்லாம் செய்யும் என மக்கள் இருக்கக்கூடாது.. சொல்வது செல்லூர் ராஜூ!

நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பேரணி இன்று இரண்டாவது நாளாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Chief minister have taken action to save the water resource : Minister Sellur Raju

இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நீர் நிலைகளை காக்க அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் வைகையை காப்பாற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட ஆட்சியர்கள், மாநகர ஆணையர்கள் ஆற்றை காப்பாற்ற துடிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

வைகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறினார். நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

English summary
Minister Sellur Raju says to press that Chief minister have taken action to save the water resource. He has allocated 2000 crore to protect water resource minister sellur Raju said. People should contribute for joining rivers he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X