”டுப்புங்க தோழர் கடலையை டுப்புங்க”... குழந்தைகள் உலகத்தை அழகாய் விவரிக்கும் உமாநாத்!
சென்னை: குழந்தைகள் உலகம்... அலாதியான ஒரு சொர்க்கம்... அவர்களுக்கு வருத்தம், பொறாமை, துக்கம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. அப்படி எல்லைகள் அற்று பறந்து விரிந்த குழந்தைகளின் உலகத்தை எளிய நடையில் முகப்புத்தகத்தில் பதிவு செய்து வருகின்றார் குழந்தைகள் எழுத்தாளரான உமாநாத்.
அவருடைய சில பதிவுகள் இங்கே நீங்கள் ரசிக்க:
#குழலியை பள்ளியில் விட்டுவந்து அமர்ந்திருந்த என்னிடம் ஒரு கப் உடைத்த கடலையுடன் என்னருகே வந்தார் பூபர். முந்தைய அனுபவத்தால் ஒரு கடலையை கூட திருடவோ எடுத்துக்கொள்ளவோ மனசு வரவில்லை. பயம் தான். போன முறை ஊரையே கூட்டினார் அல்லவா. அமைதியாக இருந்த என்னிடம் "இந்தாங்க சாப்பிடுங்க" என்றான்.
"வேணாம் நீ சாப்பிடுங்க தோழர்" என்றேன். "நல்லாக்கும். சாப்பிடுங்க" என அன்பால் நனைய வைத்தான். கண்ணில் ஜலத்துடன் இரண்டு கடலையை சாப்பிட்டேன். தொண்டையை காட்டி தோழர் சொன்னார் "இப்படியே போய் டமால்னு விழுந்துடுச்சு". வயிற்றை காட்டினார். சில விநாடிகளில் ஆரம்பமானது ஆட்டம், கப்பை நீட்டி "அதை துப்புங்க". "எதைங்க தோழர்?" "அந்த டூ துப்புங்க" (ரெண்டு கடலை" "சாப்பிட்டேனே தோழர்"
"துப்புங்க..."
"என்னங்க அங்க என்ன குழந்தைய அழவெச்சிட்டு"
யார் யார் அழ வெக்கிறதுன்னு தெரியாம பேசறாங்க தோழர்!!
# அக்காவும் அம்மாவும் ஒவ்வொரு அகல் விளக்கு ஏற்றிக்கொண்டே செல்கின்றார்கள், பின்னாடியே தம்பியானவன் ‘ஹாப்பி பர்த்டே' என ஊதி அணைத்தடி செல்கின்றான்.
"டேய் டேய்"
# வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளின் நேரத்தை எப்படி நல்லபடியாக செலவிடச்செய்வது என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கவலை. அதும் மழைக்காலம். வீட்டிற்கு வெளியே சகதி, தண்ணீர். அவர்களின் கவலையை போக்கும் வகையில் சில யோசனைகள் இங்கே (தொலைக்காட்சி, கணினி, மொபைல், வீடியோ கேம்கள் தவிர்த்து)
1. ஒரு கதை புத்தகமோ, தினசரியோ, வார இதழோ கொடுத்து உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் 50 வார்த்தைகள் அல்லது ‘க' வரிசையில் ஆரம்பிக்கும் 50 வார்த்தைகளை தாளில் எழுத சொல்லுங்கள். முதல் சில வார்த்தைகளை நீங்கள் உடன் அமர்த்து ஆரம்பித்து வைக்கவும்.
2. ஒன்றாக அமர்ந்து ஒரு கதை புத்தகம் வாசிக்கலாம்.
3. சுற்றி இருக்கும் பிள்ளைகளை வீட்டிற்கு வரவழைக்க முடியுமெனில் அனைவரையும் ஒன்றாக அமர்த்தி கதை புத்தகத்தின் ஒவ்வொரு வரியாக கதைச் சொல்ல செய்யலாம். செய்தித்தாளினை கொண்டு நிறைய விஷயங்களைச் செய்யலாம்.
4.1 அதில் இருக்கும் படங்களை மட்டும் வெட்டி தனியாக எடுக்கச் சொல்லலாம்.
4.2 ஒரு செய்தித்தாளில் மொத்தம் எத்தனை விளம்பரங்கள் என எண்ணச்சொல்லலாம்
4.3. முன்பக்கம் இருக்கும் படமும் பின் பக்கம் இருக்கும் படமும் வெட்டப்படாமல் இரண்டும் சேதாரமாகமல் வெட்டுவது என அவர்களையே ப்ளான் போடச்சொல்லவும்.
5. ஜோவென மழை பெய்யும் போது ‘வாங்க ஒன்றாக தேநீர் போடலாம்' என அவர்களை அருகில் அமர்த்தி ஒவ்வொரு ஸ்டெப்பையும் விளக்கலாம். ஒன்றாக தயாரித்த சூடான தேநீரை பருகலாம்.
6. குடுகுடு வெளியே ஓடச்சொல்லுங்கள். 3 நிமிடம் கழித்து வரச்சொல்லுங்கள். வெளியே பார்த்ததை வரையச்சொல்லுங்க.
7.ஒன்றாக சேர்ந்து தேடிக்கண்டுபிடித்து குழந்தைப் பாடல்களை ஒன்றாக பாடுங்கள்.
குழலியை பள்ளியில் விட்டுவந்து அமர்ந்திருந்த என்னிடம் ஒரு கப் உடைத்த கடலையுடன் என்னருகே வந்தார் பூபர். முந்தைய அனுபவத்தால...
Posted by Umanath Selvan on Wednesday, November 25, 2015
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications