காமன்வெல்த் எதிர்ப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த வைகோ கைது… ஜெ.மீது குற்றச்சாட்டு
மதுரை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது பேசிய அவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இன்று, ம.தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 21 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.

மதிமுக மறியல்
இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்திற்கு இன்று காலை 6.05 மணிக்கு முதல் ஆளாக மதுரை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்த வைகோ, சென்னைக்குப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தனது தொண்டர்களுடன் மறித்தார்.
கைதான வைகோ
இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வைகோ உட்பட 300க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை கைது செய்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம்
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த சேனியா காந்தி, மன்மோகன் சிங் இவர்களுடன் கைகோர்க்கும் அனைத்து தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான்.
ஜெ.மீது குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, தமிழர்களின் நினைவிடங்களை இடித்ததுபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க பார்க்கிறார்'' என்றார்.

முழக்கமிட்ட வைகோ
தொடர்ந்து அவர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே உள்ளிட்டவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கடுமையாக கோஷங்களை எழுப்பினார்.
குமுறிய வைகோ
வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. இதனால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில்
இந்த களேபாரம் அடங்கிய அடுத்த ஐந்து நிமிடத்தில், தேனி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சந்திரன் தலைமையில் 30 பேர் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க அவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மதுரை தமுக்கம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் தாமதம்
மதிமுகவினரின் மறியல் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications