வருமான வரி சோதனை இயல்பானது.. டெண்டரில் எந்த ஊழலும் நடக்கவில்லை.. முதல்வர் விளக்கம்
தமிழகத்தில் முட்டை டெண்டர், நெடுஞ்சாலை துறை டெண்டர் என்று எதிலும் முறைகேடு நடக்கவில்லை, வருமான வரி சோதனை எல்லா இயல்பான ஒன்று என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித
சென்னை: தமிழகத்தில் முட்டை டெண்டர், நெடுஞ்சாலை துறை டெண்டர் என்று எதிலும் முறைகேடு நடக்கவில்லை, வருமான வரி சோதனை எல்லா இயல்பான ஒன்று என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை அடுத்து சத்துணவு துறையில் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சத்துணவு முட்டை விநியோகத்திற்கு விடப்பட்ட ரூபாய் 100 கோடி மதிப்பில்லான புதிய டெண்டர் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த முட்டை டெண்டர் விவகாரம் குறித்தும், தொடர் வருமான வரி சோதனை குறித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
அதில், திமுக ஆட்சியில்தான் டெண்டரில் முறைகேடு நடந்தது. தற்போதைய தமிழக அரசின் டெண்டரில் முறைகேடில்லை.தமிழக அரசு எந்த ஊழலும் செய்யவில்லை.தமிழக அரசு இப்போது நன்றாக செயல்படுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்று. அவர்களுக்கு சந்தேகம் வந்தால், புகார் வந்தால் சோதனை செய்வார்கள். இதை இயல்பாக இந்தியா முழுக்க நடக்கிறது.
தமிழக அரசின் முட்டை டெண்டரில் முறைகேடு எதுவும் இல்லை.இதுவரை சரியாக முட்டை டெண்டர் விடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் படியே டெண்டர் நடந்தது.
செலவை குறைக்கவே முட்டை டெண்டர் மாநில முழுக்க ஒன்றாக நடத்த திட்டமிடப்பட்டது.எல்லா மாதமும் டெண்டர் நடத்த முடியாது , அதிக செலவு ஆகும். ரூ.2000 கோடிக்குத்தான் முட்டை டெண்டர் விடப்பட்டது. ஆனால் ரூ.5000 கோடி ஊழல் நடந்தது என்கிறார்க. ஊழல் நடந்தது என்பதெல்லாம் சுத்த பொய், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications